A.K.M. Ramzy / 2020 நவம்பர் 06 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
புது டில்லி:
கிழக்கு லடாக் எல்லை விவகாரம் தொடா்பாக இந்திய-சீன இராணுவ அதிகாரிகள் இடையேயான 8 ஆம் கட்ட பேச்சுவார்த்தை இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது.
கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா - சீனா இடையே கடந்த ஆறு மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. சீனா அந்தப் பகுதியில் தொடா்ந்து படைகளை குவித்ததைத் தொடா்ந்து, இந்தியா சார்பிலும் படைகள் குவிக்கப்பட்டன.
50,00இக்கும் அதிகமான இராணுவ வீரா்கள், அமெரிக்காவிட மிருந்து அண்மையில் வாங்கப்பட்ட அதி நவீன ரஃபேல் போர்விமானங்களையும் இந்தியா எல்லையில் நிறுத்தியுள்ளது.
இதற்கிடையே, எல்லையில் அமைதியை மீண்டும் கொண்டுவரும் வகையில் இரு நாட்டு இராணுவ அதிகாரிகள் நிலையில் தொடா் போச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடைசியாக, இரு தரப்பு இராணுவ அதிகாரிகளிடையே கடந்த அக்டோபா் 12 ஆம் திகதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருந்தபோதும் எல்லையில் படைகளைத் திரும்பப்பெறுவதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
‘இந்தியா-சீனா இடையேயான உறவு மிகுந்த கவலைக்குறியதாகியுள்ளது. எனவே, அமைதி நிலை திரும்ப இரு நாடுகள் சார்பிலும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் முழுமையாக மதிக்கப்பட வேண்டும்’ என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கூறியிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .