A.K.M. Ramzy / 2020 நவம்பர் 07 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியா- சீனா இராணுவ உயரதிகாரிகள் இடையில் எட்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை 9 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்துள்ளது.
ஆனாலும், நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற குறித்த பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை என இந்திய வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லடாக் பகுதியில் குவிக்கப்பட்ட படைகள் அனைத்தையும் விலக்கிக் கொள்ள வேண்டும் என்று இந்தியா சீனாவுக்கு இதன்போது வலியுறுத்தியுள்ளது.
மேலும், மே மாதத்துக்கு முந்தைய நிலைப்பாட்டை எல்லைக்கு கொண்டு வந்தால்தான் அமைதியும் பரஸ்பர நம்பிக்கையும் சாத்தியமாகும் என இந்திய இராணுவ உயர் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எல்லையில் பதற்றம் நீடித்தாலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இரு நாட்டு இராணுவ உயரதிகாரிகளும் நேரடித் தொடர்பில் இருப்பதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .