2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

இந்திய முஸ்லிம் என்பதில் பெருமை கொள்கிறேன்

A.K.M. Ramzy   / 2021 பெப்ரவரி 09 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

டில்லி:

ராஜ்யசபா எம்.பி.,யாக இருக்கும் காங்கிரஸ்  மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், ஓய்வு பெறுவதால் அவருக்கு பிரியாவிடை கொடுக்கப்பட்டது. அப்போது, ‛இந்திய முஸ்லிம் என்பதில் பெருமை கொள்கிறேன்' எனத் தெரிவித்தார்.

காஷ்மீரை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், அக்கட்சியின் ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்து வருகிறார். இவரது பதவி காலம் எதிர்வரும் 15இல் முடிவுக்கு வருகிறது. காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட பின்னர், சட்டசபை தேர்தல் நடத்தப்படவில்லை. எனவே குலாம் நபி ஆசாத் மீண்டும் ராஜ்யபசா எம்.பி.,யாக அங்கிருந்து தேர்வாக வாய்ப்பில்லை.

இந்நிலையில், ராஜ்யசபாவில் ஓய்வு பெறும் எம்.பி.,க்களுக்கான பிரிவு உபசார விழா நடந்தது. அப்போது குலாம் நபி ஆசாத் குறித்து மோடி பேசுகையில் கண்கலங்கினார்.

ராஜ்யசபா எம்.பி.,க்கள் அளித்த பிரியாவிடை உரைக்கு நன்றி தெரிவித்து குலாம் நபி ஆசாத் பேசியதாவது: நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும். பாகிஸ்தானுக்கு ஒரு போதும் செல்லாத அதிர்ஷ்டசாலி மக்களில் நானும் ஒருவன். பாகிஸ்தானில் நடக்கும் சில விரும்பத்தகாத விஷயங்கள் பற்றி படிக்கும் போது, நான் இந்திய முஸ்லிம் என்பதை நினைத்துப் பெருமை கொள்கிறேன்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .