2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

இருக்கைக்காக குடுமிப்பிடி சண்டை

Freelancer   / 2023 ஜூலை 25 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கர்நாடகத்தில் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் வகையில் காங்கிரஸ் அரசு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் எந்த பகுதிக்கும் பெண்கள் இலவசமாக பஸ்களில் பயணிக்கலாம்.

இந் நிலையில் அரசு பஸ்சில் பயணித்த 2 பெண் இருக்கைக்காக குடுமிப்பிடி சண்டையிட்ட சம்பவம் துமகூருவில் நடந்துள்ளது. பெங்களூருவில் இருந்து பெலகாவி நோக்கி கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ் ஒன்று சென்றது. அந்த பஸ்சில் ஏராளமான பயணிகள் இருந்தனர். அப்போது ஒரு இருக்கைக்கு 2 பெண்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டடுள்ளனர்.

 தலை முடியை பிடித்து கொண்டு ஆக்ரோஷமாக சண்டையிட்ட அவர்களை ஆண் பயணி ஒருவர் தடுக்க முயன்ற போது அதில் ஒரு பெண், அந்த ஆண் பயணியை அவதூறாக பேசியதுடன் அவரை தாக்கவும் முயன்றுள்ளார்.

 இச் சம்பவத்தை அங்கிருந்தவர்கள்  செல்போன்களில் வீடியோ எடுத்துள்ளனர். தற்போது குறிப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X