Ilango Bharathy / 2022 டிசெம்பர் 04 , மு.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் நகரில் இளைஞர் ஒருவர் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 27 ஆம் திகதி இரவு வேலையை முடித்துவிட்டு குறித்த இளைஞர் தனது வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த போது அவரை நோக்கி ஒரு கார் வேகமாக வந்துள்ளது.
இதன்போது அக் காரில் 4 இளம் பெண்கள் இருந்துள்ளனர் . அத்துடன் அவர்கள் காரை நிறுத்தி குறித்த இளைஞரிடம் ஒரு துண்டுச் சீட்டை நீட்டி ” இந்த முகவரி எங்கு உள்ளது?” என வினவியுள்ளனர்.
இந்நிலையில் குறித்த துண்டு சீட்டை வாங்கி அவர் பார்த்துக் கொண்டிருந்த போது, எதிர் பாராத விதமாக காருக்குள் இருந்த பெண்ணொருவர் இளைஞரின் முகத்தில், ஸ்பிரே ஒன்றை அடித்துள்ளார்.
இதனை சற்றும் எதிர்பாராத இளைஞர் அடுத்த வினாடியே மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அவ் இளைஞனை நான்கு பேரும் சேர்ந்து அக்காரில் கடத்திச் சென்றுள்ளனர்.
பின்னர் மறைவான ஒரு இடத்தில் காரை நிறுத்தி குறித்த இளைஞரின் கை, கால்களை கட்டிப்போட்டு, பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தியுள்ளனர்.
இச்சம்பவத்தின் போது 4 பேருமே போதையில் இருந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த இளைஞரையும் குடிக்கும்படி அப் பெண்கள் கட்டாயப்படுத்தி உள்ளனர் எனவும், பின்னர் ஒருவர் பின் ஒருவராகப் பலாத்காரம் செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் மறுநாள் அதிகாலை 3 மணியளவில் இளைஞனின் கை மற்றும் கண்களை கட்டி, ஏதோ ஒரு இடத்தில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,
இதனையடுத்து பாதிக்கப்பட்ட இளைஞர் நேராகப் பொலிஸ் நிலையம் சென்று இது குறித்து கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
6 hours ago
09 May 2026
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
09 May 2026
09 May 2026