Mithuna / 2024 ஜனவரி 16 , பி.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி கோவில் ஒன்று இருக்கிறது. இந்த கோவில் இருக்கும் பகுதியில்தான் கிருஷ்ணர் பிறந்ததாக சொல்லப்படுகிறது. அதன் அடையாளமாகவே கிருஷ்ண ஜென்மபூமி கோவில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டிருந்ததாகவும், ஆனால் கோவிலின் சில பகுதிகளை இடித்துவிட்டு ஷாஹி ஈத்கா மசூதியை கடந்த 1669 - 70ம் ஆண்டில் அப்போதைய முகலாய மன்னர் அவுரங்கசீப் தலைமையில் கட்டப்பட்டது எனவும் இந்துத்துவ அமைப்புகள் தொடர்ச்சியாக கூறி வருகின்றன.
இது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், கடந்த, 1968ம் ஆண்டு ஸ்ரீ கிருஷ்ண ஜன்மஸ்தான் சேவா சன்ஸ்தான் மற்றும் ஷாஹி மஸ்ஜித் இத்கா அறக்கட்டளை இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன்படி சர்ச்சைக்குரிய நிலத்தில், 10.9 ஏக்கர் நிலம் கோவிலுக்கும், மீதமுள்ள, 2.5 ஏக்கர் நிலம் மசூதிக்கும் பிரிக்கப்பட்டன. ஆனால், இந்த பிரிவு ஏற்கத்தக்கதல்ல எனவும், மொத்த நிலமும் கிருஷ்ண ஜென்மபூமிக்கு சொந்தமானதுதான் என்றும் இந்துத்துவ அமைப்புகள் மதுரா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன.
இதை எதிர்த்து முஸ்லிம்கள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மசூதியில் ஆய்வு நடத்த இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தை நாடின. ஆனால் கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஆய்வு செய்ய உத்தரவிட்டனர்.
இதன் பின்னர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கு தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் பல கட்டங்களாக நடைபெற்று வந்தன.
இந் நிலையில், கிருஷ்ண ஜென்ம பூமியை ஒட்டிய ஷாஹி ஈத்கா மசூதியை ஆய்வு செய்ய ஆணையம் அமைத்து பிறப்பித்த அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை மசூதியில் ஆய்வு செய்ய தடை விதிக்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
33 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago