2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

உலக திருநங்கை அழகிப் பட்டத்தை தட்டிச் சென்ற இந்தியர்

Ilango Bharathy   / 2021 டிசெம்பர் 05 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேரளாவை சேர்ந்த 25 வயதான ஸ்ருதி சித்தாரா என்பவர்  உலக அளவில் இடம்பெற்ற திருநங்கைகளுக்கான அழகுப் போட்டியில் பங்கேற்று ‘மிஸ் டிஸ்டன்ஸ் கிலோபல் யுனிவர்ஸ்‘ பட்டத்தை வென்றுள்ளார். இந்தியர் ஒருவர் இப் பட்டத்தை வெல்வது இதுவே முதல் முறையாகும்.

கொரோனாத்தொற்றுக்  காரணமாக நேரடியாக இல்லாமல் ஒன்லைன் வாயிலாக நடத்தப்பட்ட இப் போட்டியில்  இரண்டாம்  மற்றும் மூன்றாம் இடங்களை பிலிப்பைன்ஸ் மற்றும் கனடாவைச் சேர்ந்த அழகிகள் வென்றுள்ளனர்.

மேலும் சித்தாரா Most Eloquent Queen என்ற பட்டத்தையும் இதே போட்டியில் வென்றுள்ளார்.

இவர் கேரள அரசின் திருநங்கை முன்னேற்ற பிரிவிலும் பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது,

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .