2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

ஊழலை ஊக்குவிக்கவே எதிர்க்கட்சிகள் கூடுகின்றன

Freelancer   / 2023 ஜூலை 18 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் ஊழலை ஊக்குவிப்பதற்காகவே எதிர்க்கட்சிகள் ஒன்று கூடுகின்றனர். சில கட்சிகள் தங்களின் குடும்பத்திற்கான வளர்ச்சியை மட்டுமே விரும்புகின்றன என்று தெரிவித்துள்ள பிரதமர் ந​ரேந்திர மோடி  2024-ல் பா.ஜனதாவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த மக்கள் முடிவு செய்து விட்டனர் என்றார்.

ஜனநாயகம் என்பது மக்கள். மக்களால். மக்களுக்காக. ஆனால், பரம்பரை அரசியல் கட்சிகளுக்கு அது குடும்பம். குடும்பத்தினரால், குடும்பத்தினருக்காக. முதலில் குடும்பம்தான். நாட்டிற்காக ஒன்றுமில்லை. இதுதான் அவர்களது முழக்கம். அங்கே வெறுப்பு ஊழல், திருப்திபடுத்தும் அரசியல் உள்ளது. வாரிசு அரசியலால் நாடு சீரழிந்துள்ளது. அவர்களுக்கு, அவர்களுடைய குடும்ப வளர்ச்சி மட்டுமே முக்கியம். நாடடில் ஏழை மக்கள் குறித்து அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக பலமான கூட்டணியை அமைக்க பெங்களூரில்  எதிர்க்கட்சிகளின் கூட்டம் செவ்வாய்க்கிழமை (18) நடந்தது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X