Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 21, சனிக்கிழமை
Freelancer / 2025 ஜூன் 10 , பி.ப. 01:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை (9) மாலை மின்னஞ்சல மூலம் இந்த வெடிகுண்டு மிரட்டல் தகவல் வந்துள்ளது. சென்னை உச்சநீதிமன்றம், சி.பி.ஐ. அலுவலகம் மற்றும் சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீடு ஆகிய இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் வந்தது.
இதையடுத்து, சோதனை நடத்தப்பட்டது. எடப்பாடி பழனிசாமி வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் அது வெறும் புரளி என தெரியவந்தது.
ஏற்கெனவே சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இந்த நிலையில் 3ஆவது முறையாக தற்போது சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள வீட்டிற்கு மிரட்டல் வந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Jun 2025
20 Jun 2025