A.K.M. Ramzy / 2021 ஜனவரி 26 , பி.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடெல்லி
மறைந்த பாடும் நிலா பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு 'பத்ம விபூஷண் விருது' அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தை முன்னிட்டு, கல்வி, சமூக சேவை,பொது நிர்வாகம், அறிவியல் - தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு, கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 119 பேருக்கு 2021ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி என்று ஏறத்தாழ 16 இந்திய மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி சிகரம் தொட்டவர் ஸ்ரீபதி பண்டிதரத்யுல பாலசுப்ரமணியம் எனும் எஸ்.பி.பி. சினிமாவில் பாலு என்று செல்லமாக அழைக்கப்படும் இவர், கொரோனா தொற்றுக்கு ஆளாகி, அதிலிருந்து மீண்ட நிலையில் தொடர் சிகிச்சை பலனின்றி இயற்கையெய்தினார்.
பத்மஸ்ரீ, பத்மபூஷண், 6 முறை தேசிய விருது, பல்வேறு மாநில விருதுகள் என சிகரம் தொட்டவர் எஸ்.பி.பி., ராகங்கள் பதினாறு, அதில் எஸ்.பி.பி., எனும் மூன்றெழுத்து குரல் இல்லாமல் இருக்காது. அந்தளவுக்கு தேன் கலந்த தனது குரலால் ரசிகர்களை மயக்கி தாலாட்டி வைத்தார். இப்போது அவரது புகழுக்கு மற்றுமொரு மகுடமாய் பத்ம விபூஷண் விருதை அறிவித்து மத்திய அரசு கௌரவித்துள்ளது.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago