2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஏழுமலையான் கோவிலில் அமைச்சர் அமித்ஷா

A.K.M. Ramzy   / 2021 நவம்பர் 14 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருப்பதி:

திருப்பதியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இன்று தென்மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உட்பட தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, புதுச்சேரி, கோவா, கேரளா மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

இதற்கிடையே, திருப்பதியில் தெற்கு மண்டல வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் ரேணிகுண்டா வந்திறங்கினார். அங்கு அவருக்கு ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி பூங்கொத்து வழங்கி வரவேற்றார்

இந்நிலையில், திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம்  சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. அவருடன் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியும் உடன் சென்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .