A.K.M. Ramzy / 2020 நவம்பர் 08 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்கனவே திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசம், சீனிவாசம் ஆகிய விடுதிகளில் இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டு வந்தது. கொரோனா பரவலால் விஷ்ணு நிவாசம்,
சீனிவாசம் ஆகிய விடுதிகளில் உள்ள இலவச தரிசன டோக்கன் வழங்கும் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு, அந்த விடுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வர்களைத் தங்க வைத்து, தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் மையங்களாக மாற்றப்பட்டன. தற்போது அலிபிரியில் உள்ள பூதேவி கொம்ப்ளக்சில் மட்டுமே இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டு வந்தது.
இதற்கிடையே, கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால், ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
எனவே, பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசம் விடுதியில் இன்று முதல் இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட உள்ளதாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
28 minute ago
2 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
2 hours ago
4 hours ago
7 hours ago