Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Mithuna / 2023 டிசெம்பர் 26 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹுகும்சந்த் மில்கடந்த 1992-ல் மூடப்பட்டது. தொழிலாளர்கள் தங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை கேட்டு, நீண்டகால சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மத்தியபிரதேச அரசு மேற்கொண்ட முயற்சியின் பலனாக, மாநில வீட்டுவசதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் மற்றும் தொழிலாளர் சங்கங்கள் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டு,கடந்த டிசெம்பர் 20-ம் திகதி நிலுவைத் தொகை உயர் நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யப்பட்டது.
இந்நிலையில் மில் தொழிலாளர்களுக்கு ரூ.224 கோடி மதிப்பிலான நிலுவைத்தொகை வழங்கும் நிகழ்ச்சி திங்கட்கிழமை (25) இந்தூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலான பங்கேற்று பேசியதாவது: “நீண்ட காலமாக நிலுவையில் இருந்த தொழிலாளர் பிரச்சினையை தீர்த்து வைத்ததற்காக மத்திய பிரதேச அரசை பாராட்டுகிறேன். இதன் மூலம் 4,800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலன் அடைவார்கள்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாளில் அனுசரிக்கப்படும் நல்லாட்சி தினத்தில் தொழிலாளர்களின் ஆசீர்வாதங்களைப் பெறுவது இரட்டை இன்ஜின் பாஜக அரசுக்கும் மாநில மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.ஏழைகள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் ஆகிய நான்கு ஜாதிகள் எனக்கு மிகவும் முக்கியம்.
ஏழைகளுக்கான சேவை, தொழிலாளர்களுக்கு மரியாதை, தாழ்த்தப்பட்டவர்களுக்கு மரியாதை ஆகியவை எங்கள் முன்னுரிமைப் பணியாக உள்ளது. நாட்டின் தொழிலாளர்கள் அதிகாரம் பெற்று, வளமான இந்தியாவை உருவாக்குவதில் முக்கிய பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதே எங்கள் அரசின் இலக்கு ஆகும். என கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
5 hours ago
6 hours ago