2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கைது செய்யப்பட்டால் பிணை கோரி ராஜித மனு தாக்கல்

Editorial   / 2025 ஜூலை 14 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிரிந்த மீன்வளத் துறைமுகத்தில் மணல் அகழ்வுத் திட்டத்தை கொரிய நிறுவனத்திற்கு வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு 20 மில்லியனுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவால் தேடப்பட்டு வரும் முன்னாள் மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன,  கொழும்பு பிரதான  நீதவான் முன்னிலையில் முன் பிணை மனுவை, திங்கட்கிழமை (14)  தாக்கல் செய்ய உள்ளார்.

சந்தேக நபர் ராஜித சேனாரத்னவைக் கைது செய்ய பிடிவிறாந்து பிறப்பிக்கக் கோரி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு கடந்த வெள்ளிக்கிழமை (11)  மனு தாக்கல் செய்திருந்தது, மேலும் இந்தப் மனுவை பரிசீலித்த நீதவான் நீதிமன்றம்,   ராஜித சேனாரத்ன சந்தேக நபராக இருந்தால் அவரைக் கைது செய்வதற்கு எந்தத் தடையும் இல்லை என்று கூறியது.

அதன்படி, கூடுதல் நீதவான்   ராஜித் சேனாரத்னவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார்.

இருப்பினும், கைது செய்யப்படவிருந்த சந்தேக நபரை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு  வந்து வாக்குமூலம் அளிக்குமாறு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுதெரிவித்தது,

ஆனால், அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், அவரது அலைபேசி போன் பதினைந்து நாட்களாக நிறுத்திவைக்கப்பட்டு உள்ளதாகவும் பொய்யாகக் கூறி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவை தொடர்ந்து தவிர்த்து வந்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .