Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 மார்ச் 14 , பி.ப. 02:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமார் 25 லட்சம் ரூபாய் பணத்துடன் ஏ.டி.எம். இந்திரத்தைக் கொள்ளையர்கள் தூக்கி சென்ற சம்பவம் ராஜஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் உள்ள திஜாரா நகரில் பிரபல வங்கியொன்றின் ஏ.டி.எம். மையம் உள்ளது.
இங்கு கடந்த 12 ஆம் திகதி இரவு வந்த மர்ம நபர்கள், 25.83 லட்சம் ரூபாய் பணத்துடன் ஏ.டி.எம். இந்திரத்தைப் பெயர்த்து எடுத்துச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த ஏ.டி.எம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராக்களையும் அவர்கள் கழற்றிக்கொண்டு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த ஏ.டி.எம். மையத்துக்கு அருகில் பொருத்தப்பட்டுள்ள பிற கண்காணிப்பு கெமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
6 minute ago
21 minute ago
36 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
21 minute ago
36 minute ago
54 minute ago