Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.K.M. Ramzy / 2021 ஒக்டோபர் 26 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை:
மகளுக்கு துரோகம் செய்துவிட்டு இன்னொரு பெண்ணை தேடி செல்லும் மருமகன்கள் ஏராளம் பேர் உள்ளனர். தனது மகளின் வாழ்க்கை பாழாகிவிடக்கூடாதே என்பதற்காக, மருமகனை கொல்ல துணிந்த மாமியார்கள் கைதான சம்பவங்களும் நடந்துள்ளன.
ஆனால், இங்கு ஒரு மாமியாருக்கு கள்ளக்காதல் வந்துள்ளது, அதுவும், 34 வயது இளைஞரொருவனுடன்.இதுதான் ஒரு கொலை வரை கொண்டு சென்றுவிட்டுள்ளது.
அதாவது,சென்னை பாடி கைலாசநாதர் கோவில் தெருவை சேர்ந்த 34 வயது இளைஞனுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை.. கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருபவர். இவரது நண்பர் ஒருவர் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு இறந்துவிட்டார். அதன்பிறகு அந்த நண்பரின் மனைவியுடன் 34 வயது இளைஞனுக்கு பழக்கம் ஏற்பட்டது.
ஆரம்பத்தில் 2 பேரும் சாதாரணமாகத்தான் பேசி வந்துள்ளனர். நாளுக்கு நாள் அது கள்ளக்காதலாக மாறி விட்டது. 2 பேரும் பல இடங்களுக்கு சென்று வந்தும், ஊர் சுற்றி வந்தததாகவும் தெரிகிறது. அப்படித்தான் இவர்கள் ஊரை சுற்றும்போது, இந்த கள்ளக்காதல் விவகாரம் அந்த பெண்ணின் மருமகனுக்கு தெரிந்துவிட்டது.
மாமியாரின் கள்ளக்காதலை பார்த்து அதிர்ச்சி அடைந்தமருமகன் , நேரடியாகவே இதை பற்றி அவரிடம் கேட்டுவிட்டார்.. உடனடியாக கள்ளக்காதலை கைவிடுமாறும் சற்று கடுமையாக கண்டித்துள்ளார் மருமகன். இனிமேல் தன்னுடைய மாமியாரை பார்க்க, வீட்டுக்கு வர கூடாது, அப்படியே மீறி வந்தால் கொலை செய்து விடுவேன் என்றும் கள்ளக்காதலனை மிரட்டியுள்ளார். ஆனாலும் இந்த கள்ளச் ஜோடி எதற்குமே அசரவில்லை.
இந்த நிலையில், கள்ளக் காதலன் தன்னுடைய கள்ளக்காதலி வீட்டுக்கு சென்றுள்ளார். இந்த விஷயம் மருமகனுக்கு காதுகளுக்கு தெரிய வந்தது. உடனடியாக வீட்டுக்கு சென்று தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு ஒருகட்டத்தில் அடிதடியாக உருவெடுத்தது. கள்ளக்காதலனை மருமகன் சரமாரியாக தாக்கி யுள்ளார்..
இதில் பலத்த இரத்த காயம் அடைந்த கள்ளக்காதலனை அங்கிருந்தவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
24 minute ago
29 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
29 minute ago
30 minute ago