A.K.M. Ramzy / 2020 நவம்பர் 16 , மு.ப. 08:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல-மகரவிளக்கு பூஜையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை திறக்கப்பட்டது. கோவிலில் பக்தர்கள் வழிபட, திங்கள்கிழமை இன்று ( 16) முதல் அனுமதி அளிக்கப்படும்.
இதுகுறித்து கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவஸ்வம் சபை தெரிவித்துள்ளதானது;
சபரிமலை ஐயப்பன் கோவிலில் 62 நாள்கள் நடைபெ றும் மண்டல-மகரவிளக்கு பூஜையையொட்டி, தந்திரி கண்டரரூ ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஏ.கே.சுதீா் நம்பூதிரி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு கோவில் கருவறையை திறந்து விளக்குகளை ஏற்றினார்.
புதிதாக தேர்வு செய்யப்பட்ட மேல்சாந்தி வி.கே.ஜெயராஜ் பொட்டி, மாளிகைபுரம் மேல்சாந்தி எம்.என்.ராஜ்குமார் ஆகியோர் புனிதமான பதினெட்டாம் படியில் முதலில் ஏறி வழிபாடு நடத்தினர். இந்த பூஜை காலத்தில் சுமார் 85,000 பக்தர்கள் கோவிலுக்கு வருகை தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
26 minute ago
1 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
1 hours ago
4 hours ago
7 hours ago