A.K.M. Ramzy / 2021 மே 26 , பி.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோல்கட்டா:
யாஸ் புயல், அதி தீவிர புயலாக மாறி கரையை கடக்க துவங்கியதால், மேற்கு வங்க மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன், பலத்த மழை பெய்து வருகிறது.
வங்கக்கடலில் உருவான யாஸ் புயல் அதி தீவிர புயலாக மாறி ஒடிசாவின் பத்ரக் மாவட்டத்தில் கரையை கடக்க துவங்கி உள்ளது. இதனால், வடக்கு ஒடிசாவின் கடற்கரையோர பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். புயல் கரையை கடப்பதால், மேற்கு வங்கம், ஒடிசா, ஜார்கண்டில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
புயல் காரணமாக மும்பை மற்றும் கோல்கட்டா, புவனேஸ்வர் இடையே விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கோல்கட்டா விமான நிலையம் இன்று இரவு 7:45 மணி வரையிலும், புவனேஸ்வர் விமான நிலையம் நாளை காலை 5: 00 மணி வரையிலும், ஒடிசாவின் ஜர்சுகுடா விமான நிலையம் 7: 45 மணி வரையிலும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. துர்காபூர், ரூர்கேலா விமான நிலையங்களும் மூடப்பட்டு உள்ளன..
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago