2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

ஒன்லைன் ரம்மிக்குத் தடை

Ilango Bharathy   / 2022 செப்டெம்பர் 27 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

நேற்றுக் காலை(26) முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

இதன்போது ஒன்லைன் விளையாட்டு தடை சட்டத்திற்கு ஒப்புதல் தரப்பட்டிருப்பதாகத்  தகவல் வெளியாகியுள்ளது.

அது மட்டுமல்லாமல் ஒன்லைன் விளையாட்டுகளில் ஒரு சில விளையாட்டுகளை மாத்திரம் தடை செய்யவுள்ளதாகவும், ஏனைய விளையாட்டுகளை  ஒழுங்குபடுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விரைவில் இதற்கான சட்டம் பிறப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X