Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 மே 20 , மு.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெண் தொண்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து, மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்துக்கு வந்திருந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சுப்ரியா சுலே “மராட்டியத்தில் ஒரு பெண்ணை தாக்க துணியும் ஆணின் கையை உடைப்பேன்” என ஆக்ரோஷமாக கூறியுள்ளார்.
அங்கு நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர்,
தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் தொண்டர் உள்பட 4 பேர், சமையல் எரிவாயு விலை உயர்வு குறித்து மனு கொடுக்க சென்றதாக தெரிகிறது. இது அங்கு கூடியிருந்த பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்களுக்கு ஆத்திரத்தை எற்படுத்தியது.
அப்போது சிலர் அந்த பெண்ணை தாக்கினர். இது தொடர்பாக பா.ஜ.கவினர் மூவர் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ஆண்ணொருவர், பெண்ணொருவரை தாக்குவது மராட்டிய கலாசாரத்துடன் எந்த வகையிலும் ஒத்துபோகாது. இது சாகு மகாராஜ், மகாத்மா புலே, பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் சத்ரபதி சிவாஜி மகாராஜின் மராட்டியமாகும். அவர்கள் எப்போதும் பெண்களை மதித்தார்கள் என்றார்.
நான் சொல்கிறேன். இனிமேல் மாநிலத்தில் ஒரு பெண்ணை அடிக்க யாரேனும் கை ஓங்கினால், நானே அங்கு நேரில் சென்று அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வேன். அதுமட்டுமன்றி அவரது கையை உடைத்து அவரிடமே ஒப்படைப்பேன் என்றார்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago