2025 மே 06, செவ்வாய்க்கிழமை

’ஒரே நாடு, ஒரே தேர்​தல்’ பிரேரணை தாக்கல் ஒத்திவைப்பு

Freelancer   / 2024 டிசெம்பர் 16 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளு​மன்​றத்​தில், ‘ஒரே நாடு, ஒரே தேர்​தல்’ பிரேரணை தாக்கல் செய்​யப்​படுவதை மத்திய அரசு தள்ளி​வைத்​துள்ளது.

பாராளு​மன்ற குளிர்கால கூட்​டத்​தொடர், கடந்த 4ஆம் திகதி தொடங்கி, வரும் 20ஆம் திகதி வரை நடைபெறும். கூட்டம் தொடங்​கிய​தில் இருந்தே அதானி விவகாரம், சம்பல் வன்முறை, மணிப்​பூர் விவகாரம் குறித்து அவையில் விவாதம் நடத்த வலியுறுத்தி எதிர்க்​கட்​சிகள் அமளியில் ஈடுபட்டன. 

இதற்​கிடையே, ஒரே நாடு, ஒரே தேர்தல் பிரேரணைக்கு, மத்திய அமைச்​சரவை கடந்த 12ஆம் திகதி ஒப்புதல் அளித்​தது. பாராளு​மன்​றத்​தில் இந்த பிரேரணை விரை​வில் தாக்கல் செய்யப்படும் என எதிர்​பார்க்​கப்​பட்​டது.

இந்நிலையில், மக்களவை​யில் ஒரேநாடு, ஒரே தேர்தல் பிரேரணை மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்​வால், திங்கட்கிழமை (16)  தாக்கல் செய்​வார் என முதலில் அறிவிக்​கப்​பட்​டது. பாராளு​மன்ற நடைமுறைப்​படி, எம்.பி.க்​களுக்கு இந்த பிரேரணைகளின் நகல் கடந்த வாரம் வழங்​கப்​பட்டன. இந்த நிலை​யில், பாராளு​மன்ற அலுவல் தொடர்பாக மாற்றியமைக்​கப்​பட்ட பட்டியலை மக்களவை செயலகம் வெளி​யிட்​டுள்​ளது.

அதில், ‘துணை மானிய கோரிக்கைகள் குறித்து மக்களவை​யில், டிசெம்பர 16ஆம் திகதி விவா​திக்​கப்​படும்’ என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. 

ஆனால் இந்த பிரேரணைகள் மக்களவையில் திங்கட்கிழமை (16) தாக்கல் செய்யப்படாது என மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன. மாறாக இந்த வார இறுதியில் தாக்கல் செய்ய அரசு முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

மக்களவையின் மாற்றியமைக்கப்பட்ட அலுவல் பட்டியலை மக்களவை செயலகம் வெளியிட்டு இருந்தது. இதில் இன்றைக்கான அலுவல்களில் மேற்படி பிரேரணைகள் இடம்பெறவில்லை.

 பிரேரணை ​தாக்​கல் தள்​ளிவைக்​கப்​பட்​டதற்கான ​காரணம் இதுவரை தெரிய​வரவில்லை.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X