2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

ஓட்டம் எடுத்தார் மனைவி: கொண்டாடினார் கணவன்

Freelancer   / 2023 ஒக்டோபர் 08 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 தங்கள் மனைவி பிரிந்து சென்று விட்டால் கணவன் கண்ணீர் விட்டு வருத்தப்படுவதையும் சிலர் மது குடித்து வருத்தத்தை போக்கி கொள்வதையும் பார்த்துள்ளோம்.

ஆனால் 40வயதான நபர் ஒருவர், தனது மனைவி வேறு ஒருவருடன் சென்றதை தனது நண்பர்களுக்கு பிரியாணி, மது விருந்து என வைத்து, ஆடல் பாடலுடன் கொண்டாடியுள்ள சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது.

கேரள மாநிலத்தை சேர்ந்த தம்பதி, திருமணமாகி வாழ்ந்து வந்த நிலையில் மனைவிக்கு, அதே பகுதியை சேர்ந்த மற்றொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. 

இதனை அறிந்த கணவன் தனது மனைவியை கண்டித்துள்ளார்.
இதனால் அடிக்கடி கணவன், மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.

சம்பவத்தன்று கணவர் வெளியில் சென்று வீட்டிற்கு வந்த போது அவரது மனைவி தனது கள்ளக்காதலனுடன் ஓடி சென்றது தெரியவந்துள்ளது.

முதலில் மனைவி வேறு ஒருவருடன் சென்றதால் அவர் மன உளைச்சலுக்கும் ஆளாகி உள்ளார். ஆனால் அதில் இருந்து விடுபட்டு வெளியில் வர வேண்டும் என எண்ணிய கணவன், இதனை நாம் ஒருவிழாவாக கொண்டாடுவோம் என எண்ணி, தனது நண்பர்களை  வீட்டிற்கு அழைத்துள்ளார்.

அவரது அழைப்பின் பேரில் அவரது வீட்டிற்கு அவரது நண்பர்கள் உட்பட 250 பேர் வந்தனர். அவர்கள் அனைவருக்கும் மது வாங்கி கொடுத்து, பிரியாணி சமைத்து பரிமாறி உள்ளார்.

பின்னர் போதை தலைக்கேறிய நிலையில், அனைவரும் ஒன்று சேர்ந்து,  ஆடி,பாடி கொண்டாடியுள்ளனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X