2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கூட்ட நெரிசலில் சிக்கி மூவர் பலி

Freelancer   / 2025 ஜூன் 29 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒடிசா மாநிலம், பூரியில் உள்ள ஜெகநாதர் கோவிலில் இடம்பெற்ற வருடாந்த  ரத யாத்திரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்குண்டு மூவர் உயிரிழந்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை (29) அதிகாலை 4.30 மணியளவில், தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் அப்பகுதியில் குவிந்திருந்தனர். அப்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது.இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 

மேலும், 10 பேர் படுகாயமடைந்தனர். 

பக்தர்கள் அதிக அளவில் திரண்டிருந்த பகுதியில், கோவிலுக்கு பொருட்களை ஏற்றி வந்த இரண்டு லொறிகள் வந்ததால் மேலும் நெரிசல் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .