A.K.M. Ramzy / 2020 நவம்பர் 09 , பி.ப. 02:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை,
அமெரிக்க துணை ஜனாதிபதி பதவிக்கு ஜனநாயக கட்சி சார்பில் களத்தில் நின்ற கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழில் வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அமெரிக்க வரலாற்றில் பெண் ஒருவர் துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப் படுவது இதுவே முதல் முறையாகும். இந்தப் பெருமையை பெறும் கமலா ஹாரிஸ், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது இந்தியர்கள் அனைவருக்கும் பெருமை அளிக்கும் அம்சம் ஆகும்.
உலகம் முழுவதும் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த, குறிப்பாக உலக மக்களை பீதியில் ஆழ்த்தியிருக்கும் கொரோனாவையே மறக்கடிக்கச் செய்த அமெரிக்க தேர்தல் தற்போதுமுடிவடைந்திருக்கிறது.
இந்தநிலையில், அமெரிக்க துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும், தமிழ்நாட்டின், திருவாரூர் மாவட்டம், துளசேந்திரபுரம் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸுக்கு வாழ்த்துத் தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின், தன் கைப்படத் தமிழில் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .