2021 டிசெம்பர் 04, சனிக்கிழமை

கருணாநிதியையும் ஸ்டாலினையும் சாடுகிறார் நட்டா

A.K.M. Ramzy   / 2021 நவம்பர் 25 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருப்பூர்;

அன்று கருணாநிதி வெள்ளத்தில் இறங்கி போஸ் கெடுத்தார்; இன்று ஸ்டாலின் கொடுக்கிறார் என திருப்பூரில் பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.

நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சிக்கு சொந்த அலுவலக கட்டிடம் இல்லாத மாவட்டங்களில் சொந்த கட்டிடம் கட்டும் திட்டத்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாரதிய ஜனதா தொடங்கியது.

அந்த வகையில் தமிழகத்தில் முதல் கட்டமாக 17 மாவட்டங்களில் சொந்த கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் வெகு வேகமாக நடைபெற்று வருகிறது.  அந்தவகையில் நாடு முழுவதும் அனைத்து மாவட்ட அலுவலகங்களும் ஒரே மாதிரியாக இருக்கும் வகையில் கட்டிட வரைபடத்தை டெல்லி தலைமை வடிவமைத்து கொடுத்துள்ளது. அதன்படி கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. தலைவர் அறை, வரவேற்பறை, கூட்ட அரங்கு, நிர்வாகிகள் அறை, முக்கிய பிரமுகர்கள் ஓய்வு அறை, பார்க்கிங் உள்ளிட்ட வசதிகள் கொண்டதாகவும் கட்டப்படுகிறது.

 

அதன் ஒருபகுதியாக தமிழகத்தில் திருப்பூர்,  ஈரோடு, நெல்லை, திருப்பத்தூர் மாவட்ட அலுவலக கட்டிட பணிகள் முடிவடைந்ததையடுத்து அந்த அலுவலக கட்டிடங்களை திறந்து வைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.  இதற்கான விழா திருப்பூரில் மாலை நடைபெற்றது. இதில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டு புதிய அலுவலக கட்டிடங்களை திறந்து வைத்தார்.

 

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X