A.K.M. Ramzy / 2021 மே 27 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி
கங்கை கரைகளில் புதைக்கப்பட்ட உடல்களில் சுற்றப்பட்டிருந்த காவிநிறத் துணிகளை உத்தரப்பிரதேச அரசாங்கத்தின் பணியாளர்கள் அகற்றி வருகின்றனர். இந்தக்காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகியதால் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
கொரோனாவின் இரண்டாவது அலையால் அதிக உயிர்கள் பலியானதால், அவர்களின் இறுதி சடங்குகளை உறவினர்களால் முறையாக செய்ய முடியவில்லை. இதனால், சடலங்களை கங்கை நதியில் வீசுவதும், கரைகளில் புதைப்பதும் நடைபெற்றன.
இச்செய்திகள் வெளியாகி சர்ச்சையானதால், முதலமைச்சர் யோகியின் உத்தரவின் பேரில் அதுபோன்ற செயல்கள் தடுக்கப்படுகிறன. இவை வாரணாசி, அலகாபாத், கான்பூர், உன்னாவ் மற்றும் பலியா போன்ற பிரதேசங்களிலுள்ள கங்கை கரைகளில் அதிகமாகப் புதைக்கப்பட்டன.
ஓரிரு அடிகள் ஆழத்தில் புதைக்கப்பட்ட சடலங்கள் சில நாட்களுக்கு முன் பெய்த மழை மற்றும் வீசியக் காற்றாலும் வெளியில் தெரியத் தொடங்கின.
புதைக்கப்பட்டவர்களின் தலைப்பகுதியில் அடையாளத்துக்கு வைக்கப்படும் மூங்கில்களையும் பிடுங்குகின்றனர். பொலிஸ் பாதுகாப்புடன் செய்யப்படும் இதன் படக்காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உடலில் சுற்றப்படும் துணிகளில் ‘ராம் ராம்’ என்ற எழுத்துக்கள் அச்சிடப்பட்டுள்ளன. இதன் காரணமாக அந்த துணியை ‘ராம்நாமி’ என இந்தியில் அழைக்கிறார்கள். இதை குறிப்பிட்டு முதலமைச்சர் யோகியை எதிர்க்கட்சிகள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
06 Mar 2026
06 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
06 Mar 2026
06 Mar 2026