A.K.M. Ramzy / 2021 ஜனவரி 28 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெங்களூர் :
கர்நாடகத்தில் எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது.
சமீபத்தில்அமைச்சரவையில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் 7 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பதவி கிடைக்காத சில எம்.எல்.ஏ.க்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதற்கிடையே இலாகாக்கள் மாற்றப்பட்டதால் சில அமைச்சர்களும் அதிருப்தியில் உள்ளனர்.
அவர்களில் சிலர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறினர். இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் பெங்களூர் விதான சவுதாவில் இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு கூடுகிறது.
இது நடப்பாண்டின் முதல் கூட்டம் என்பதால், சட்டசபையின் கூட்டுக் கூட்டத்தில் ஆளுனர் வஜூபாய் வாலா கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
அதைத்தொடர்ந்து, முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
20 minute ago
41 minute ago
47 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
41 minute ago
47 minute ago
52 minute ago