Freelancer / 2023 ஓகஸ்ட் 10 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்தியப் பிரதேசம் மாநிலம் அஷ்டா என்கிற நகரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து அந்த பெண் இந்தூரில் உள்ள இண்டெக்ஸ் என்கிற மருத்துவமனையை அணுகி மருத்துவர்களிடம் வயிற்று வலி குறித்து கூறியுள்ளார்.
வயிறு மிகவும் வீக்கத்துடன் இருந்ததால் மருத்துவர்கள் பெண்ணுக்கு ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகளை செய்து பின்னர், கர்ப்பை பையில் கட்டி இருப்பதை கண்டுபிடித்தனர். மேலும், கட்டி வெடிக்கும் நிலையில் இருந்ததால் உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
இதையடுத்து, பெண் மற்றும் அவரது வீட்டாரின் சம்மதத்துடன், சுமார் 12 மருத்துவர்கள் மற்றும் உதவிப் பணியாளர்கள் அடங்கிய குழு இரண்டு மணி நேர அறுவை சிகிச்சையை மேற்கொண்டது. பின்னர், அறுவை சிகிச்சை வெற்றிக்கரமாக முடிந்த நிலையில் மருத்துவர்கள் பெண்ணின் வயிற்றில் இருந்து 15 கிலோ கிராம் எடை கொண்ட கட்டியை அகற்றினர்.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago