Ilango Bharathy / 2021 ஜூன் 16 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாத் தொற்றின் பாதிப்பானது தீவிரமடைந்து வருகின்றது.
இந்நிலையில் கொரோனாவுக்குப் போட்டியாக அண்மைக்காலமாக அங்கு பலருக்கு கரும் பூஞ்சை ,வெள்ளை பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை போன்ற நோய்கள் கண்டறியப்பட்டுவருகின்றன.

இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரிலுள்ள வைத்தியசாலையொன்றில் கடந்த ஒன்றரை மாதங்களாக, கொரோனாத் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 34 வயதுடைய நபர் ஒருவருக்கு, புதிதாக பச்சை பூஞ்சை நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள அவரது நுரையீரலை வைத்தியர்கள் சோதனை செய்த போதே, இந்நோய் தாக்கி இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவர் மும்பை நகருக்கு சிகிச்சைக்காக விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்ப்பட்டுள்ளது.
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago