Freelancer / 2025 ஜனவரி 20 , பி.ப. 01:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
பீகாரின் மேற்கு சம்பரன் மாவட்டத்தில், கள்ளச்சாராயம் குடித்து 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
அப்பகுதியில், தொடர்ந்து 7 பேர் பலியானதையடுத்து, அவர்கள் கள்ளச்சாராயம் குடித்து பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் முதல் மரணம் ஏற்பட்டு 4 நாட்கள் கடந்த நிலையில் பலியான 7 பேரின் உடல்களும் ஏற்கனவே தகனம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் அனைத்து இறப்புகளும் லாரிய காவல் நிலைய பகுதியில் பதிவாகியுள்ளது.
இவர்கள் அனைவரும் கள்ளச் சாராயம் குடித்து பலியானதாக அந்தப் மக்கள் தெரிவித்த நிலையில், அதில் ஒருவர் ட்ராக்டர் விபத்தில் பலியானதாகவும், மற்றொருவர் பக்கவாதத்தில் பலியானதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago