2025 ஜூலை 31, வியாழக்கிழமை

கழிப்பறையில் சிறுநீர் கழிப்பதற்கு வாஷ்பேஷன்

Freelancer   / 2022 மே 18 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிருஷ்ணராயபுரம் பஸ் அருகே பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கட்டப்பட்ட புதிய கழிப்பறையில் சிறுநீர் கழிப்பதற்கு பீங்கான் கோப்பைக்கு (செராமிக்ஸ்) பதிலாக, ஹோட்டல்களில் கைகளை கழுவுதற்காக பயன்படுத்தும் வாஷ்பேஷன் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 இப்பகுதியில் ஏராளமான அரசு அலுவலகங்கள், பள்ளிகள், வங்கிகள், நீதிமன்றம் என பல அலுவலகங்கள் உள்ளது. இங்கு வரும் பொதுமக்கள் மற்றும் கிருஷ்ணராயபுரம் சுற்றுப்புற கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் தாய்மார்கள், பள்ளி மற்றும் கல்லூரி பெண்கள் மற்றும் பொதுமக்கள் கரூர்- திருச்சி செல்வதற்கும் நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வேலைகளுக்கு செல்ல இங்கு பஸ் ஏறி சென்று வருகின்றனர். 

அவர்கள் அவசரத்துக்காக பயன்படுத்தும் கழிவறையிலேயே சிறுநீர் கழிப்பதற்காக இவ்வாறு வாஷ்பேஷன் வைக்கப்பட்டுள்ளது. அதற்கு கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அந்த ​ வாஷ்பேஷன் அகற்றப்பட்டது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .