2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கழிவறைக்குள் மாணவிகள் : ஆசிரியை இடைநிறுத்தம்

Editorial   / 2021 டிசெம்பர் 20 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

பட்டிவீரன்பட்டி:

திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே மாணவிகளை பள்ளி கழிவறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை இடைநிறுத்தம்  செய்யப்பட்டார். ​அத்துடன் பாத்திரம் கழுவ வைத்த ஆசிரியரும் இடமாற்றம் செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே செங்கட்டான்பட்டி கிராமத்தில் வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி தலைமை ஆசிரியை   7ம் வகுப்பு மாணவிகளை கழிவறையை சுத்தம் செய்ய வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் பள்ளி ஆசிரியர்  ஒருவர், மதிய உணவுக்குப்பின் தனது சாப்பாட்டு பாத்திரங்களை மாணவிகளை சுத்தம் செய்ய சொல்வதாகவும் புகார் கூறப்பட்டது.

இவ்விரு சம்பவங்களும் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டமையால் தலைமை ஆசிரியை இடைநிறுத்தம் செய்யப்பட்டார். ஆசிரியருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X