2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

கழுத்தை அறுத்து கொன்று விடுவார்கள்

Freelancer   / 2023 ஜூலை 12 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

  பாகிஸ்தானைச் சேர்ந்த சீமாவுக்கும் இந்தியாவைச் சேர்ந்த சச்சின் மீனா என்ற இளைஞருக்கும் பப்ஜி விளையாட்டு மூலம் 2019ஆம் ஆண்டு அறிமுகமாகியுள்ளனர்.

இந்த விளையாட்டு மூலம் இருவருக்கும் காதல் ஏற்பட்ட நிலையில், தான் பாகிஸ்தானை விட்டு வெளியேறி இந்தியா வந்து காதலன் சச்சினுடன் வாழ அதிரடி முடிவெடுத்தார் சீமா. அதன்படி, நேபாளம் வழியாக கடந்த மே மாதம் இந்தியா வந்த சீமா கிரேட்டர் நொய்டா பகுதியில் வசிக்கும் சச்சினுடன் சேர்ந்து வாழத் தொடங்கினார். தன்னுடன் தனது 4 குழந்தைகளையும் இவர் அழைத்து வந்துள்ளார்.

இந்நிலையில், சீமாவின் கணவன், தனது மனைவியை பாகிஸ்தானுக்கு அனுப்புமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

“பாகிஸ்தானுக்கு என்னை திருப்பி அனுப்பினால் அங்கு கழுத்தை அறுத்து கொலை செய்து விடுவார்கள். என்னால் அங்கு செல்ல முடியாது. சச்சின் எனக்கு மரியாதை தருகிறார். குழந்தைகளை அன்புடன் நடத்துகிறார். பணம் இருந்தாலும் மதிப்பு தராத நபருடன் எப்படி சேர்ந்து வாழ்வது" என சீமா தெரிவித்தார். மேலும் பாகிஸ்தானில் உள்ள தனது நிலத்தை ரூ.12 இலட்சத்திற்கு விற்று இந்தியா வந்ததாக சீமா கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X