Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 பெப்ரவரி 15 , பி.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகம் முழுவதும் நேற்றை தினம் ‘காதலர் தினம்‘ கொண்டாடப்பட்டது. இந்நிலையில், காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆக்ராவில் பஜ்ரங் தள கட்சியின் உறுப்பினர்கள் சிலர் பூங்கா, உணவகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில்கண்ணில் பட்ட காதல் ஜோடிகளையெல்லாம் துன்புறுத்தி விரட்டியடித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து பஜ்ரங் தளத்தின் பொறுப்பாளர் அவதார் சிங் கில் கூறுகையில், காதலர் தினம் கொண்டாட்டம் என்பது இந்தியாவில் தழைத்தோங்கும் மேற்கத்திய கலாச்சாரம். அது இங்கு வளர அனுமதிக்க முடியாது. இந்துத்துவாவைக் காப்பாற்ற காதலர் தினத்தன்று மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் பொது இடங்களில் பார்க்கும் இளம் ஜோடிகளை கேள்விக் கேட்க வேண்டும் என்று கூறினார்.
இவரது கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் காதல் ஜோடிகளை துன்புறுத்திய பஜ்ரங் தள உறுப்பினர்கள் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago