Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2023 பெப்ரவரி 15 , மு.ப. 08:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
மதுரை, அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த மணிரத்னம் என்ற இளைஞர் அதே பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவியொருவரை ”தன்னைக் காதலிக்குமாறு நீண்ட காலமாக வற்புறுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து அச்சிறுமி தனது தந்தையிடம் கூறியதால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது மோதலாக மாறியுள்ளது.
இதுதொடர்பான புகாரின் பேரில் மணிரத்னம் கைதாகி பிணையில் வெளியில் வந்துள்ளார்.
அதன் பின்னரும் அச்சிறுமியிடம் மணிரத்னம் தன்னைக் காதலிக்குமாறு தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது.
எனினும் மாணவி தொடர்ந்து மறுத்து வந்ததால் ஆத்திரமடைந்த மணிரத்னம், தனது நண்பருடன் சேர்ந்து சிறுமியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
பெட்ரோல் குண்டு பட்டதில் வீட்டின் சுவர் லேசான சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்த தெப்பக்குளம் பொலிஸார் மணிரத்னம் மற்றும் அவரது நண்பரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .