2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

காதலின் பேரில் பண மோசடி - ‘பிக்பொஸ் ஜூலி‘ புகார்

Ilango Bharathy   / 2021 டிசெம்பர் 05 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து  வழங்கி  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பொஸ்-01 நிகழ்ச்சியில் கலந்து  கொண்டு  பிரபலமானவர் மரியா ஜூலி.

இவர் அண்மையில்  ”தன்னையொருவர் காதலிப்பதாகக் கூறி சுமார் ரூ.2.30 லட்சம் மோசடி செய்திருப்பதாக பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.ஜூலி கொடுத்துள்ள அப்புகாரில், 26 வயதான மனிஷ் என்பவர் தன்னை காதலிப்பதாகக் கூறி தன்னிடமிருந்து இருசக்கர வாகனம், நகை, பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மனிஷ்  அழகு நிலையத்தில் வேலை பார்த்து வருவதாகவும், கடந்த 4 வருடங்களாக அவரைக் காதலித்து வந்ததாகவும்  ஜூலி குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .