A.K.M. Ramzy / 2021 ஜனவரி 12 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கார்வார்:
மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் ஸ்ரீபாத் எஸ்ஸோ நாயக் சென்ற கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அவரது மனைவி உள்பட இருவர் உயிரிழந்தனர்.
மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சரும், கோவா வடக்கு தொகுதி பாஜக எம்.பி.யுமான ஸ்ரீபாத் எஸ்ஸோ நாயக், தனது மனைவி விஜயா நாயக், உதவியாளர் தீபக் ராமதாஸ் உள்ளிட்ட 4 பேர் கோவாவில் இருந்து கர்நாடக மாநிலம், வட கன்னட மாவட்டத்திலுள்ள எல்லாப்பூர் சென்றுள்ளனர்.
எல்லாப்பூரில் இருந்து திங்கள் கிழமை இரவு கோகர்ணாவுக்கு காரில் புறப்பட்டுள்ளனர்.
அங்கோலா வட்டம், ஹொசகம்பி கிராமத்தில் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரெனக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மத்திய இணையமைச்சர் ஸ்ரீபாத் நாயக் உள்ளிட்டோர் படுகாயமடைந்தனர்.
இவர்கள் அங்கோலாவிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே, சிகிச்சை பலனளிக்காமல் மத்திய இணையமைச்சர் ஸ்ரீபாத் நாயக்கின் மனைவி விஜயா நாயக், உதவியாளர் தீபக் ராமதாஸ் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
மத்திய இணையமைச்சர் ஸ்ரீபாத் நாயக் உள்ளிட்ட 3 பேருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீபாத் நாயக்கின் நிலை கவலைக்கிடக்கமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2 hours ago
07 Mar 2026
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
07 Mar 2026
07 Mar 2026