Mithuna / 2024 பெப்ரவரி 05 , பி.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நீடித்து வருகிறது. இந்நிலையில், தொடர் பனிப்பொழிவின் காரணமாக அங்கு விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

சனிக்கிழமை (03) நள்ளிரவு முதல் தொடர்ந்து பனிப்பொழிவு நீடித்து வரும் நிலையில், விமான ஓடுபாதைகளில் பனி படர்ந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, மும்பையிலிருந்து ஸ்ரீநகர் செல்லும் 4 விமானங்களும், லே செல்லும் 2 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும், பனிப்பொழிவால் சாலைகளில் பனி படர்ந்துள்ளதால் அவற்றை அப்புறப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. வாகன ஓட்டிகள் கவனமாக செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
6 minute ago
16 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
16 minute ago