2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

காஷ்மீரில் புராதன துர்க்கை சிலை மீட்பு

Editorial   / 2021 டிசெம்பர் 07 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புட்காம் மாவட்டத்தில் பழைமையான துர்கா தேவி சிலை உள்ளூர் ​பொலிஸாரால் சில தினங்களுக்கு முன் மீட்கப்பட்டது.

இதேவேளை முன்னதாக கடந்த ஒக்டோபர் இறுதியிலும் கருங்கல்லால் செதுக்கப்பட்ட துர்கா தேவியின் சிலையொன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சிலைகள் 1,300 ஆண்டுகள் பழைமையானவை என்று  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிங்க சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் துர்க்கை சிலையை ஆய்வு செய்வதற்காக ஜம்மு காஷ்மீர் காப்பகங்கள்,  தொல்லியல் துறை மற்றும் அருங்காட்சியகங்களின் அதிகாரிகள் குழுவை பொலிஸார் வரவழைத்தனர். ஆய்வுக்கு பிறகே இந்த துர்கா தேவியின் சிலை கி.பி. 7ஆம் நூற்றாண்டு அல்லது சுமார் 1,300 ஆண்டுகளுக்கு முந்தைய சிலையாக இருக்கலாம் என்று அந்த குழு தெரிவித்ததாக பொலிஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .