A.K.M. Ramzy / 2020 நவம்பர் 10 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜம்மு,
காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும் மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபின், மெகபூபா 14 மாத காலம் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.
அதிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக ஜம்மு சென்ற மெகபூபா, அங்கு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
“காஷ்மீரில் பயங்கரவாதம் வேரறுக்கப்பட்டுவிட்டதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால், உண்மையில் இங்கு பயங்கரவாதம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் சராசரியாக 10 முதல் 15 இளைஞர்கள் பயங்கரவாத குழுக்களில் இணைந்து வருகிறார்கள்.
சிறைக்கு செல்வதைவிட, பயங்கரவாத பாதையில் துப்பாக்கி தூக்கி, அதனால் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை என்று காஷ்மீர் இளைஞர்கள் நினைக்கிறார்கள். இங்கு, எதிலும் சாராத நடுவழி என்ற ஒன்று இல்லாமலே போய்விட்டது. கருத்துவேறுபாட்டு குரல்கள் கடுமையான அடக்குமுறையால் ஒடுக்கப்படுகின்றன.
மத்தியில் பா.ஜ.க.வின் ஆட்சியின்கீழ் காஷ்மீரில் பயங்கரவாதம் அதிகரிக்கும் நிலையில், எங்களைப் போன்ற அரசியல்வாதிகள் இங்கு வசிப்பதில் பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம்.
எல்லையில் நிலவும் பதற்றமான சூழலால் மக்கள் கவலைப்படுகிறார்கள். எல்லை தாண்டிய இடைவிடாத தாக்குதல் களால் அங்கு உள்ளூர்வாசிகள் எப்போதும் அபாயச் சூழலிலேயே வாழ்கிறார்கள். தங்களின் நிலங்களில்கூட அவர்களால் வேலைபார்க்க முடியவில்லை.
இந்நிலையை மாற்ற, பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். அந்நாடு தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் நிலையில் அது எப்படி சாத்தியம் என்பவர்கள், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மேற்கொண்ட நடவடிக்கைகளை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
26 minute ago
1 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
1 hours ago
4 hours ago
7 hours ago