2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

காஸ் சிலிண்டர் வெடித்து ஐவர் பலி

A.K.M. Ramzy   / 2021 நவம்பர் 23 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேலம்:

 சேலத்தில் சிலிண்டர் வெடித்ததில் மூன்று வீடுகள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கியவர்களில் ஐந்து பேர் உயிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை,காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 பாண்டுரங்கநாதர் கோவில் தெருவில் இன்று காலை 6.30 மணிக்கு சிலிண்டர் வெடித்ததில் 3 வீடுகள் இடிந்து விழுந்தன.

இதில் சிக்கிய 5 வயது பெண் குழந்தை உள்ளிட்ட 10 நபர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர், பேரிடர் மீட்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். காஸ் வெடித்து இடிந்த கட்டிடத்தில் இருந்து தீயணைப்பு துறையினர் குழந்தை பூஜாஸ்ரீயை மீட்டனர்.

 மேலும் இடிபாடுகளில் சிக்கி யாரேனும் உயிரிழந்தார்களா? என்று தெரியவில்லை. தீயணைப்புத்துறையினரும், பேரிடர் மீட்புத் துறையினரும் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .