A.K.M. Ramzy / 2021 மார்ச் 02 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழகம்;
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக, திமுக கூட்டணிக் கட்சிகள் தொகுதி பங்கீட்டில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், தங்களுக்கே மீண்டும் ஆசனம் ஒதுக்கி வெற்றி பெற வைக்க வேண்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எம்எல்ஏக்கள் தங்கள் இஷ்ட தெய்வங்களுக்கு கிடா வெட்டி விருந்து வைக்கின்றனர்.
மானாமதுரை அதிமுக எம்எல்ஏ நாகராஜன் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர். இவர் தனக்கு இந்த முறையும் ஆசனம் கிடைக்கச் செய்து, வெற்றிபெற வைக்க வேண்டி, இஷ்ட தெய்வமான திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மனுக்கு கடந்த வாரம்கிடா வெட்டி விருந்து வைத்தார். இதில் அதிமுகவினர் பங்கேற்றனர்.
திருப்பத்தூர் திமுக எம்எல்ஏ கே.ஆர்.பெரியகருப்பன் தொடர்ந்து மூன்று முறை வென்றுள்ளார். இந்த முறையும் அவருக்கே திருப்பத்தூர் தொகுதி ஒதுக்கப்பட உள்ளது.
தன்னை 4-வது முறையாக வெற்றி பெற வைக்க வேண்டி சிங்கம்புணரி அருகே பிரான்மலை அடிவாரத்தில் உள்ள கருப்பர், மலையான் சுவாமிகளுக்கு கிடா வெட்டி தனது கட்சியினருக்கு விருந்து கொடுத்தார்.
2 hours ago
8 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
09 May 2026