A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 22 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவை மும்பை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விடுதலையானார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா பங்கேற்க வில்லை. பஞ்சாபில் உள்ள பதான்கோட் மாவட்டத்தில் கொள்ளையர்கள் தாக்கியதில் ரெய்னாவின் உறவினர்கள் இருவர் உயிரிழந்தார்கள்.
இதையடுத்து, இந்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்து சுரேஷ் ரெய்னா விலகினார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகக் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தார்.
இந்நிலையில் கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக சுரேஷ் ரெய்னாவை இன்று அதிகாலை மும்பை பொலிஸ் கைது செய்தது.
மும்பை விமான நிலையத்தின் அருகில் உள்ள தனியார் கிளப்பில் ரெய்னாவைக் கைது செய்த பொலிஸார், பின்னர் அவரை பிணையில், விடுவித்தார்கள்.
அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி தனியார் கிளப் இயங்கியதாலும் கொரோனா விதிமுறை களைக் கடைப்பிடிக்காததாலும் பொலிஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
கிளப்பில் இருந்த சுரேஷ் ரெய்னா, பொலிவுட் பிரபலம் சுசானே கான், பாடகர் குரு ரந்தாவா உள்ளிட்ட 34 பேர் கைது செய்யப்பட் டார்கள். பிறகு ரெய்னா, சுசானே ஆகியோரை விடுவிக்கப்பட்டார்கள்.
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago