2025 மே 09, வெள்ளிக்கிழமை

குதிரையில் உணவு விநியோகம்

Mithuna   / 2024 ஜனவரி 03 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெலுங்கானா மாநிலத்தில் டேங்கர் லொறிகள் வேலை நிறுத்தத்தால் பெட்ரோல் , டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு சில பெட்ரோல் பங்குகளில் மட்டும் பெட்ரோல், டீசல் உள்ளது.

இதனால் சாரதிகள் நீண்ட தூரம் வரிசையில் நின்று தங்களது வாகனங்களுக்கு பெட்ரோல், டீசலை நிரப்பி செல்கின்றனர். இதனால் மோட்டார் சைக்கிள் வைத்திருப்பவர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

இந் நிலையில் தனியார் நிறுவன உணவு விநியோகம் செய்யும் ஊழியர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் இல்லாததால் குதிரையில் சென்று உணவு விநியோகம் செய்துள்ளார்.

தனியார் நிறுவன ஊழியர் குதிரையில் சென்று உணவு விநியோகம் செய்வதை சிலர் தங்களது ​தொலைபேசியில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர். வித்தியாசமான முறையில் உணவு விநியோகம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X