Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Freelancer / 2025 பெப்ரவரி 26 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகா கும்பமேளாவில், ஒரே நேரத்தில் 15,000க்கும் மேற்பட்டோர் தூய்மைப் பணியில் ஈடுபட்டு புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
2019ஆம் ஆண்டில் நடைபெற்ற கும்பமேளாவின்போது, ஒரே நேரத்தில் 10,000 பேர் தூய்மைப் பணியில் ஈடுபட்டு கின்னஸ் சாதனை படைத்தனர். இதை முறியடிக்கும் வகையில் தற்போதைய மகா கும்பமேளாவில், திங்கட்கிழமை (24) தூய்மை மகா கும்பமேளா நடைபெற்றது.
அப்போது ஒரே நேரத்தில் சுமார் 15,000க்கும் மேற்பட்டோர் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். மகா கும்ப நகரின் 4 மண்டலங்களிலும் தூய்மைப் பணி நடைபெற்றது.
இதன்போது, இலண்டனில் உள்ள கின்னஸ் சாதனை தலைமை அலுவலகத்தில் இருந்து ரிஷி நாத், பிரயாக்ராஜுக்கு நேரில் வருகை தந்து கின்னஸ் சாதனை முயற்சியை பார்வையிட்டார்.
தூய்மை பணியாளர்களின் எண்ணிக்கையை அவர் கணக்கிட்டு, அவர்களின் தூய்மை பணியை ஆய்வு செய்தார். இறுதியில் கின்னஸ் சாதனைக்கான சான்றிதழை அவர் வழங்கினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .