Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 பெப்ரவரி 06 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெண் பராமரிப்பாளர் ஒருவர் 8 மாதக் குழந்தையைக் கடுமையாகத் தாக்கி தூக்கி வீசிய சம்பவம் குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தின் சுரத்தைச் சேர்ந்தவர் மித்தேஷ் பட்டேல். அவரும் அவரது மனைவியும் தனியார் அலுவலகமொன்றில் பணிபுரிந்து வருகின்றனர்.
இதனால் அவர்களுக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதற்காக கடந்த செப்டம்பர் மாதம் குழந்தை பராமரிப்பாளர் ஒருவரை நியமித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் பட்டேல் தனது அலுவலகத்தில் இருந்த போது அவரது தாயார் தொலைபேசியில் தொடர்புகொண்டு ” அவரது இரட்டைக் குழந்தைகளில் ஒன்று அழுதுக்கொண்டே இருந்ததாகவும், பின்னர் திடீரென மயங்கிவிட்டதாகவும், இதனால் அக் குழந்தையை அக்கம்பக்கத்தினர் உடனடியாக மருத்துவமனை அழைத்துச்சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பட்டேல் குடும்பத்தினர் வீட்டில் பொருத்தப்பட்ட சிசிடிவி கெமராக் காட்சிகளைப் பார்த்த போது அதில், பராமரிப்பாளர் குறித்த குழந்தையின் காதை திருகி அடித்து துன்புறுத்துவதுடன், குழந்தையை படுக்கையில் தூக்கி வீசும் காட்சிகளைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனையடுத்து மித்தேஷ் பட்டேல் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கவே, குறித்த பராமரிப்பாளரிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டபோது ” தான் கோவத்தில் அவ்வாறு செய்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த பராமரிப்பாளரின் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டள்ளது.
மேலும் அக்குழந்தைக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், குழந்தையின் மூளையில் இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
6 minute ago
14 minute ago
26 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
14 minute ago
26 minute ago
28 minute ago