A.K.M. Ramzy / 2021 ஜூன் 08 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

மூணாறு :
கேரளாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஜூன் 9 ஆம் திகதி வரை பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. கொரோனா பரவல் கட்டுக்குள் இல்லை என்பதால் ஜூன் 16 ஆம் திகதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டதாக நேற்று முதலமைச்சர் பினராயிவிஜயன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
ஜூன் 12,13 ஆம் திகதிகளில் கடும் கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும். அத்தியாவசிய கடைகள், சிறு தொழில்களுக்கான மூலப்பொருட்கள் விற்கும் கடைகள், கட்டுமான பொருள் கடைகள் வழக்கம்போல் செயல்படும். வங்கிகள் திங்கள்,புதன், வெள்ளி கிழமைகளில் செயல்படும்.
மளிகைக் கடைகள், நகை, செருப்பு, ஜவுளி, கண்ணாடி கடைகள் ஜூன் 11 ஆம் திகதி மட்டும் காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை செயல்படும். அரசாங்கம் சார்ந்த நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் ஜூன் 17 ஆம் திகதி முதல் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago