A.K.M. Ramzy / 2020 நவம்பர் 08 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம், மஞ்சேஸ்வரம் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் (முஸ்லிம் லீக் கட்சி) எம்.எல்.ஏ., எம்.சி. கமருதீன், மஞ்சேஸ்வரத்தில் பெஷன் கோல்ட் ஜுவல்லரி என்கிற நகை கடையை நடத்தி வருகிறார். இந்த நகை கடையின் மேலாண்மை இயக்குனர் பூக்கோயா தங்கல் என்பவராவார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த நகை கடையில் தங்க நகை சேமிப்பு திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால், இந்த திட்டத் தின் காலாவதி முடிந்த பிறகும் முதலீட்டாளர்களுக்கு உரிய நகைகள் திருப்பி வழங்காமல் ரூ.100 கோடி வரை மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக தங்க நகை சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்தவர்கள் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தனர். நகை மோசடி தொடர்பாக எம்.எல்.ஏ. எம்.சி. கமருதீன், மேலாண்மை இயக்குனர் பூக்கோயா தங்கல் ஆகியோருக்கு எதிராக 150இக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கு தொடர்பாக கேரள குற்றப்பிரிவு பொலிஸார் விசாரணை செய்த பொலிஸார்
நகை மோசடியில் எம்.எல்.ஏ.வுக்கு தொடர்பு இருப்பது உறுதியானதை தொடர்ந்து அவரை கைது செய்ததாகவும், மேலும் இந்த வழக்கில் நகைக் கடையின் மேலாண்மை இயக்குனர் பூக்கோயா தங்கலை கைது செய்ய உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
27 minute ago
1 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
1 hours ago
4 hours ago
7 hours ago