2026 மார்ச் 06, வெள்ளிக்கிழமை

கொண்டாட்டத்தால் பற்றியெரிந்த பொலிஸ் வாகனம்

Ilango Bharathy   / 2021 டிசெம்பர் 27 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிறிஸ்மஸ் தினக் கொண்டாட்டத்தில் வன்முறை  வெடித்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் கொச்சி அருகே வெளியூரைச் சேர்ந்த 3000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் அப்பகுதியில் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் பலர் நேற்று முன்தினம் இரவு (25) கிறிஸ்மஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடியுள்ளனர்.

இதன்போது மது போதையில் சிலர் கூச்சலிட்ட படி நடந்து கொண்டதால்  அப்பகுதியைச் சேர்ந்த மக்களுக்கும்

தொழிலாளிகளுக்கும்  இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சிலர் அப்பகுதி மக்களை கற்களை வீசி தாக்கியதோடு இச்சம்பவத்தைத்  தொலைபேசியில் பதிவு செய்தவர்களையும் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் அறிந்து சம்வ இடத்திற்கு வந்த பொலிஸார் மோதலில் ஈடுபட்டவர்களைக் கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர்.

இதனை கேட்க மறுத்த தொழிலாளர்கள் பொலிஸாரையும் சரமாரியாக தாக்க தொடங்கியதாகவும், பொலிஸாரின் வாகனத்திற்கு  தீ வைத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

இத்  தாக்குதலில் 4 பொலிஸார்  உட்பட பலர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .