2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

கொரோனாவுக்கு யாரும் பலியாகவில்லை!

A.K.M. Ramzy   / 2021 ஒக்டோபர் 18 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மும்பை,

மும்பையில் கொரோனா பரவலால் நேற்று  ஒருவர் கூட உயிரிழக்கவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மராட்டியத்தில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதேநேரம்,நேற்று புதிதாக 1,715 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 65 இலட்சத்து 91 ஆயிரத்து 697 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல மேலும் 2 ஆயிரத்து 680 பேர் குணமாகி உள்ளனர். இதுவரை 64 இலட்சத்து 19 ஆயிரத்து 678 பேர் குணமாகி உள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 28 ஆயிரத்து 631 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு  புதிதாக 29 பேர் பலியானார்கள்.

இதேவேளை,தலைநகர் மும்பையில் புதிதாக 367 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 7 இலட்சத்து 50 ஆயிரத்து 508 ஆக உயர்ந்து உள்ளது. அதே நேரத்தில் நகரில் நேற்று ஒருவர் கூட கொரோனா நோய்க்கு பலியாகவில்லை.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .